தனிநபர் பாதுகாப்பு துப்பாக்கிகள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Date:

தனிப்பட்ட நபர்களுக்கு உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை மீளப்பெற பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசரவில் உள்ள அரசாங்க வர்த்தக வெடிபொருள் களஞ்சியசாலையில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஒப்படைக்குமாறு அனைத்து உரிமதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வு செய்து தேவை என்ன என்பதை கண்டறிந்த பின்னர் மீண்டும் துப்பாக்கிகள் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சொத்து பாதுகாப்பு / பயிர் சேத பாதுகாப்பு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...