ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டம் 01 மற்றும் 02 கீழ் 09 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கட்டம் 02 இன் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, ஹொரண, வல்லவிட்ட, மத்துகம, தொடங்கொட மற்றும் இங்கிரிய பிரதேசங்களுக்கும் இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும்.

கேகாலை மாவட்டத்தில் வரகாபொல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, யடியன்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட மற்றும் கிரியெல்லப்ப பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை நிலை 02ன் கீழ் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 01 ஆம் கட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் எல்ல, ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தில் யக்கமுல்ல மற்றும் நியகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் பேருவளை மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, அலபாத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...