Wednesday, October 16, 2024

Latest Posts

தீவகக் கடற்றொழில் அமைப்புக்களை புங்குடுதீவில் சந்தித்த கனேடியத் தூதர்

“கடல் கடந்த தீவுகளில் சுமார் 1,500 மீனவர்கள். ஆனால், ஒரு எரிபொருள் நிலையம்கூட இல்லாதமை மீனவர்களின் பெரும் பிரச்சினையாகக்  காணப்படுகின்றது.” – என்று கனேடியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் யாழ்ப்பாணம், தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவகப் பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ். புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமூக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ, தீவகப் பெண்கள் வலையமைப்பினர், தீவகப் பகுதி கடற்றொழில் அமைப்புக்களின் நெடுந்தீவு சமாசத் தலைவர் யூலியான் குரூஸ், நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு பிரதேச மீனவப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த மூவர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.