வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா மோசடி!

0
283

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரை வெளிநாடு அனுப்பி வைப்பதாகக் கூறி 80 இலட்ச ரூபாவைப் பெற்றுக்கொண்டு, இளைஞரை வெளிநாட்டுக்கு  அனுப்பி வைக்காத நிலையில், மேற்படி இளைஞர் மாவட்ட குற்றத் தடுப்புப்  பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பணத்தைப் பெற்றுக்கொண்டவரைக் கைது செய்து, விசாரணைகளின் பின்னர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here