இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

0
122

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையின் அறுகம்பே பகுதி மற்றும் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ள இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு தேசிய பாதுகாப்பு சபை அறிவிப்பு விடுத்துள்ளது.

சில சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலியர்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here