ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்!

Date:

ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு.பொ.) நேற்று புதன்கிழமை கொழும்பில் காலமானார்.

மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் பிறந்தார்.

இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் ஆவார்.  

1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.

அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்குப் பேரிழப்பாகக் கருதப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...