இலங்கைக்கு கடத்த இருந்த போதை பொருள் மீட்பு

0
217

சமீப காலமாக இந்திய கடல் பகுதியின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24-ல், சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த மீன்பிடி படகில், கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது 5,500 கிலோ எடையுள்ள, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சேட்டிலைட் போன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

போதைப்பொருளுடன் பிடிபட்ட கடத்தல்காரர்கள்

போதைப்பொருளுடன் பிடிபட்ட கடத்தல்காரர்கள்

போதைப்பொருள் கடத்திய இலங்கை படகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here