ரணில் மீண்டும் இந்தியா பயணம்

0
152

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியாக ரணில் இந்தியா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, டிசம்பர் 27-ம் திகதி முன்னாள் குடியரசுத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்ற உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இம்முறை விஜயத்தின் போது இந்தியாவில் உள்ள புராதன இடங்களை பார்வையிடுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்க நவம்பர் 21 முதல் 30 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here