சர்வதேச நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்

Date:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.  

வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ். மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது.

இதையடுத்து யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து சர்வதேசமே  தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...