அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

Date:

களுத்துறை – ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

அரச வங்கியொன்றின் ATM மூலம் வைப்பிலிட கொண்டு சென்ற பணமே இவ்வாறு மர்ம நபரால் அபகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளுடன் பின்புற நுழைவாயில் வழியாக சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் பணப்பையை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...