14 இந்திய மீனவர்கள் கைது

Date:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் 14 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...