நாட்டை கட்டியெழுப்ப ஐ.தே.க தயார் – ரணில் அறிவிப்பு

0
233

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், அந்தத் தோல்வியை எதிர்கொண்டுள்ள மக்கள் மாற்று வழியைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றே தெரிவு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தனது சிரேஷ்ட உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

மாற்று வேலைத்திட்டத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்கத் தயாராக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் எரிபொருள் நெருக்கடி தொடர்பாகவும் விரிவாகப் பேசியுள்ளார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 115 அமெரிக்க டொலர்கள் வரை உயரலாம் என்று கூறியுள்ளார்.

ஐக்கிய இராச்சியமும் எரிபொருள் விலையை ஏறக்குறைய இரண்டு பவுணால் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஐ.தே.க தலைவர், முழு உலகமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தார்.

இலங்கை ஏற்கனவே பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் எதிர்காலத்தில் எரிபொருள் விலை தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here