லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

0
310

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த உயர் அதிகாரி இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகரின் தெமட்டகொடை பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றின் வருடாந்த வரி அறிக்கையினை சரிபார்த்து வழங்குவதற்காக சந்தேகநபரான பிரதி ஆணையாளர் ரூ. 100,000 பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த இலஞ்சத் தொகையை ரூ 50,000 ஆக குறைக்க முன்வந்த அதிகாரி, அதிலிருந்து ரூ. 42 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ. 8,000 பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த வேளையிலேயே, இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான குறித்த சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here