ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி தலைவரும், கழக துணை பொது செயலாளரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தலைவர் கனிமொழியை இலங்கைதொழிலாளர்காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.
இதில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளரும் அதன் குழுவினர்களும் ஜல்லிக்கட்டில் எதிர் கொள்ளும் இன்னல்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாக கனிமொழி எம்பி உறுதி அளித்தார்.
மேலும் தமிழ் கலாச்சார பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் பெண்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனவும் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.