கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொஸ்கொட ஹதரமன்ஹந்திய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இது முன்னெடுக்கப்படுவதாக பொலீசார் கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க இராணுவமும் காவல்துறையும் இணைந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.