யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (04) வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுப்பிய கடித்தத்திற்கிணங்க அவர், இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது:
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமைவாக அங்கு சென்றதாகக் கூறினார். பாராளுமன்ற முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா, தமிழீழ மக்களுக்கு வணக்கம் என விழித்து உரையாற்றினார்.
இதை அவர் தமது “வாடஸ்அப்பிலும்” வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
தம்மை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அர்ச்சுனா எம்.பி.நேற்றைய தினம் வெளியிட்ட காணொளியிலும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டு பாராளுமன்றத்திலிருந்து அர்ச்சுனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.