இன்று முதல் 45 டிப்போக்களில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள்!- திலும் அமுனுகம

0
197

நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 45 டிப்போக்களில் இன்று (05) காலை முதல் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இன்று மாலைக்குள் ஏனைய டிப்போக்களில் எரிபொருள் நிரப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் பெறக்கூடிய டிப்போக்கள்,

கொழும்பு – ஹோமாகம, மொரட்டுவ, மீதொட்டமுல்ல, தலங்கம, உடஹமுல்ல
கம்பஹா – ஜா-எல, கிரிடிவெல, கடவத்தை, நிட்டம்புவ
களுத்துறை – அளுத்கம, ஹொரண, களுத்துறை, மத்துகம
கண்டி – கண்டி தெற்கு, உடுதும்பர.
ருகுண – அம்பலாங்கொட, அக்குரஸ்ஸ, எல்பிட்டிய, ஹக்மன, மாத்தறை, உடுகம, கதிர்காமம், தங்காலை
நுவரெலியா – ஹங்குரன்கெத்த
சப்ரகமுவ – தெரணியகல, எம்பிலிபிட்டிய, கொடகவெல, கலவான
ஊவா – மொனராகலை, வெல்லவாய
வடமேற்கு – குளியாப்பிட்டிய, நிக்கவெரட்டிய, கல்கமுவ
ரஜரட்ட – அனுராதபுரம், தம்புள்ளை, ஹொரோபத்தான, கெபித்திகொல்லேவ, பொலன்னறுவை
வடக்கு – காரைநகர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி
கிழக்கு – மட்டக்களப்பு, களவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மூதூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here