விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 12:22 மணிக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் ரணில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போது ரணில் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வழமைக்கு திரும்பியிருந்தது. மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.