ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

Date:

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

கைதான பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றியவர் 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அவருடன் கைதான ஏனைய இரண்டு பேரும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைதான மூன்று சந்தேக நபர்களும் இன்று (17) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன்போது சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த “நேவி தினேஷ்” என்ற நபரால் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...