மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திணைக்களம், இப் பகுதிகளில் சில இடங்களில் 75 mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40-50 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
