யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

0
1198
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர். 

இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர், பாலாவி தெற்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here