வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2025 ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தில், மலையகத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தை தவிர புதிதாக வேறு எந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதியின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பணவாக 200 ரூபா அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் , நுவரெலியாவில் IT Park உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இரண்டு திட்டங்களும் அமுல்படுத்தப்படும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, மலையகப்பகுதி IT துறை வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது எனவும், இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சி அடையும். எனவே ஜனாதிபதியின் இந்த இரு திட்டங்கள் வரவேற்கத்தக்கது எனவும் இ.தொ. கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10...

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...

விரக்தியில் பிரதியமைச்சர்! வெளிநாடு செல்ல முடிவு

விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று...

உண்மையை உடைத்த ஷவேந்திர சில்வா!

தமக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்தவிதமான எண்ணமும் இல்லை என இலங்கையின்...