இந்த வெள்ள அனர்த்தம் எதிர்க்கட்சிக்கு மேலே வருவதற்கான ஒரு வாய்ப்பாக இருப்பதாக சிலர் நினைப்பதாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார தெரிவித்துள்ளார்.
“உண்மையில் வெள்ளத்தில் சிக்கியிருப்பது எதிர்க்கட்சிதான். அதைத்தான் சொல்ல வேண்டியுள்ளது. அவர்கள் உண்மையாக தலையிட்டிருந்தால், பாதுகாப்பு முகாம்களுக்கு சென்று, முன்கூட்டியே ஒரு பிரதிநிதியை அனுப்பி, ‘இங்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று பார்த்து வாருங்கள்’ என்று கேட்டிருப்பார்கள். அதன் பின்னர் நாமல் அவர்களும், இன்னொருவரும் செல்வார்கள். இரண்டு மூன்று இடங்களுக்கு சென்று பெரிய பேச்சுகளை நடத்திவிட்டு திரும்புவார்கள்.
இந்த வெள்ளத்தை சிலர் எதிர்க்கட்சியினர் கரை சேருவதற்கான ஒரு படகாக நினைத்தனர். ஆனால் அந்த வெள்ளத்திலேயே சிக்கி, அதன் பெருக்கெடுக்கும் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உண்மையில் இன்று இடம்பெயர்ந்த நிலையில் இருப்பது எதிர்க்கட்சிதான்.”
இவ்வாறு சமிந்த லலித் குமார எம்.பி. நேற்று (21) கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
