ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாக, எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதியன்று எரிபொருள் விலை அறிவிக்கப்பட வேண்டும். எனினும், இம்முறை அந்த அறிவிப்பு சிறிதளவு தாமதமாகியுள்ளது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சிறிய அளவில் குறைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
