வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதப்படுத்தியுள்ளார்.
“ வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமு லாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வெனிசுலா தலைநகரில் சில இடங்களில் அமெரிக்க படையினர் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
