ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 58ஆவது பிறந்தநாள் இன்று (24) கொண்டாடப்படுகிறது.
அவர் 1968ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி மாத்தளை, தேவஹூவ கிராமத்தில் பிறந்தார்.
தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலை மற்றும் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொண்டார்.
உயர்கல்விக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த அவர், பின்னர் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் பெற்று, 1995ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டத்தை (BSc) பெற்றுக்கொண்டார்.
மாணவப் பருவத்திலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலில் ஈடுபட்டு வந்த அனுரகுமார திசாநாயக்க, 2000ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
