டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

Date:

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டது.

இந்த விஜயத்தில் புதுடில்லிக்கு மேலதிகமாக குஜராத் மற்றும் கேரளா மாநிலத்திற்கும் இக்குழு பயணிக்கவுள்ளதுடன், அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

தவிர, இந்தியாவின் விவசாய, தொழில் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உரித்தான மத்தியநிலையத்தையும் பார்வையிடவுள்ளனர்.

இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...