NPPயின் சொரணாதொட்ட பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி!

0
14

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலுள்ள சொரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பும் 4 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

நேற்று (19) நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 10 வாக்குகளும் ஆதரவாக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் சர்வஜன பலயவின் ஓர் உறுப்பினர் என மொத்தம் 10 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here