சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் பிக்குவாக காவி உடை அணிந்திருந்த நபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 3 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளில் குறித்த குற்றம் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி சட்டமா அதிபரால் அனுராதபுரம் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கான விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
