ஜப்பானை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனை மையங்களின் சர்வதேச வலையமைப்பான NURA, Hayleys குழுமத்துடன் இணைந்து இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
FUJIFILM DKH LLC நிறுவனத்தினால் இயக்கப்படும் NURA, Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions (Pvt) Ltd உடன் மேற்கொண்டுள்ள மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக இலங்கைக்குள் நுழையவுள்ளது.
NURA மையத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான சுகாதாரப் பரிசோதனைக்கு பொதுவாக சுமார் 120 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதற்காக முன்கூட்டியே உணவு தவிர்ப்பதோ அல்லது மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவதோ அவசியமில்லை.

வாழ்க்கை முறை தொடர்பான முக்கிய நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு ஸ்கேன் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுவதுடன், பரிசோதனை அறிக்கையும் அன்றைய தினமே வழங்கப்படும். இதன் மூலம் ஒரே வருகையில் முழுமையான சுகாதாரப் பரிசோதனையை நிறைவு செய்ய முடியும்.
இந்தப் பரிசோதனைகளில் Fujifilm நிறுவனத்தின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஜப்பானிய இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக, வழக்கமான CT ஸ்கேன்களுடன் ஒப்பிடுகையில் 97 சதவீதம் வரை குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தும் Ultra-low-dose CT தொழில்நுட்பமும் இதில் உள்ளடங்குகிறது. அத்துடன், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் படங்களின் தரம் மேம்படுத்தப்பட்டு, மருத்துவர்களுக்கு நோயறிதல் மற்றும் மருத்துவத் தீர்மானங்களை மேற்கொள்ள உதவுகிறது.
இலங்கையில் NURA சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அதன் நிறுவனர் மற்றும் பணிப்பாளரான Masaharu Morita கருத்துத் தெரிவிக்கையில்,
ஜப்பானில் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளதாகவும், நோய் ஏற்படுவதற்கு முன்னரே மக்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கலாசாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே NURA நிறுவனத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியா, மங்கோலியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் ஏற்கனவே தமது பரிசோதனை மையங்கள் இயங்கி வருவதாகவும், அடுத்ததாக இலங்கைக்கு வருவதில் பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.

மேலும், AI தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு உதவுவதுடன், குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தும் CT ஸ்கேன் தொழில்நுட்பத்தின் ஊடாக வருடாந்த சுகாதாரப் பரிசோதனைகளை எளிதாக்குவதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
NURA மையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக மேலதிக தகவல்களையும் அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள விரும்புவோர் www.nurahealth.lk/waitlist என்ற இணையத்தளத்தில் காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்துகொள்ள முடியும்.
NURA தொடர்பில்
FUJIFILM Corporation மற்றும் Dr. Kutty’s Healthcare (DKH) ஆகியவற்றின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்ட NURA, FUJIFILM DKH LLC நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது.
2021ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூருவில் தனது முதலாவது மையத்தை ஆரம்பித்த இந்நிறுவனம், தற்போது பல்வேறு நாடுகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
Innovative Health Solutions (Pvt) Ltd தொடர்பில்
Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் தடுப்பு சுகாதாரப் பரிசோதனைத் தீர்வுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
