அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (11) வழங்கப்படவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது, நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் மோதலைத் தொடர்ந்து அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விரிவான விசாரணைகளின் பின்னர்:

சம்பவத்துடன் தொடர்புடைய 42 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைகளின் ஒரு கட்டமாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 சந்தேகநபர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கம்பஹா மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் எடுத்த முடிவை ரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள 2024 பெப்ரவரி 12 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...