2 கோடி லஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது

0
34

ரூபாய் 2 கோடிக்கு மேற்பட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுகாதார அமைச்சின் ஓய்வு பெற்ற பிரதான எழுத்தர் ஒருவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

அவர் சுகாதார அமைச்சின் உணவகத்தில் இருந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு, ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட பின்னர், அதற்கான வாடகைத் தொகையை அமைச்சு செலுத்தும் போது சம்பந்தப்பட்ட செக்குகளை தாமதமின்றி வழங்குவதற்காக, சந்தேகநபர் இவ்வாறு லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற பிரதான எழுத்தர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர் இம்மாதம் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் (ரிமாண்ட்) வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here