12.5 kg லாப் எரிவாயு சிலிண்டர்4199 ரூபாவாகவும், 5 kg லாப் எரிவாயு சிலிண்டர் 1680 ரூபாவாகவும் அதிகரிப்பு

0
353

12.5 கிலோகிராம் லாப் நிறுவன எரிவாயு சிலிண்டர் விலை 4199 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாப் நிறுவன எரிவாயு சிலிண்டர் விலை 1680 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாப் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.


என்ற போதும் தாம் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை என லாப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறுகையில்,விலை கட்டுப்பாடு இல்லாமையினால், எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.


டொலர் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கபபடலாம்.


விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் கிடையாது. அசாதாரண விலை அதிகரிப்பாயின் மாத்திரமே அமைச்சு தலையிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here