சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (20) நள்ளிரவு முதல் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறுகிய காலத்தில் மூன்று தடவைகள் மூடப்பட்டமை பாரிய பிரச்சினையாக உள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.