மக்கள் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனவாதம் வேலைக்காகாது

Date:

தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம். பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாதெனவும் அந்த காலம் முடிந்துவிட்டது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவிருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. மக்கள் சொல்வதை ஜனாதிபதி கேட்காத காரணத்தினால் ஜனாதிபதி சொல்வதை மக்கள் கேட்கக்கூடாது எனக்கூறி ஜனாதிபதியின் உரையின் போது தொலைக்காட்சிப் பெட்டியை மூடி வைத்துவிடுங்கள் என்று சொன்னார்கள். நானும் ஜனாதிபதியின் உரையை கேட்கவில்லை. வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து விசேடமாக எந்த விடயங்களையும் கூறவில்லை என்றே விளங்குகிறது.

இன்னும் இரண்டு வருடங்கள் தயவு செய்து தாருங்கள் என்று மக்களிடம் கேட்பதாகவே தென்படுகின்றது.ஆகவே நாட்டை பாதுகாப்போம் நாட்டை மீட்போம் என்ற மீட்பர்கள் ஒரு வருடம் தாருங்கள் இரண்டு வருடங்கள் தாருங்கள் என்ற கெஞ்சிக் கொண்டு உள்ளனர்.

தற்போது மக்கள் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம் பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது அந்த காலம் முடிந்துவிட்டது என்றார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...

திருத்தம் – ரணில் தொடர்பில் விசாரணை தொடர்கிறது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக...

ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம்...

ரணிலுக்கு ஆதரவாக பலர் களத்தில்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...