முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கடந்த 18ஆம் திகதி சிங்கப்பூர் நகரிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (21) பொதுவான அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் முன்பே பல முறை அறிவுறுத்தியிருந்த போதிலும், வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், அந்த அறுவை சிகிச்சையை பலமுறை ஒத்திவைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
