நாளைய தினம் மிகவும் கவனமாக செயற்படவும்

Date:

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் நாளைய தினம் (30) மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள அறிக்கையில் நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் எனத் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால், உடலில் நீர்ச்சத்து குறைவடைதல் மற்றும் உப்பகற்றப்படுதல் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இதனால் தாகம் ஏற்படாவிட்டாலும் அடிக்கடி போதியளவு நீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருத்தல் மற்றும் அதிக கடினமான வேலைகளைத் தவிர்க்கவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

மென்மையான, வெளிர் நிறத்திலான பருத்தி ஆடைகளை அணியவும், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...