2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

0
246

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை மற்றொரு தரப்பினரிடம் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருநாள் பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம ஒழுங்குபடுத்துநரும், சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

“5ஆம் திகதி தொடங்கும் பாராளுமன்ற வாரம் குறித்து கலந்துரையாட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று சபாநாயகரின் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்தில் நிதியமைச்சகத்தில் நடந்ததாக கூறப்படும் ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனை குறித்து ஒருநாள் பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியாக நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால் தொடர்ந்து வைத்த அந்த கோரிக்கையை அரசு நிராகரித்தது.”

இவ்வாறு கயந்த கருணாதிலக எம்.பி. நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here