ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று (23) நடைபெற்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி (NPP) அணியை தோற்கடித்து, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, 07 பேரைக் கொண்ட இயக்குநர் சபைக்காக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 04 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியிலிருந்து 02 பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து 01 நபரும் தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
