எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

Date:

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்யும் வாய்ப்பு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து குறைந்து வந்தன. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையும் மீண்டும் அதிகரித்தது. எனவே, விலைகள் தொடர்ந்து குறையும் நிலை தற்போது இல்லை; மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், மத்திய கிழக்கு போருக்கு முன்னர் இருந்த அளவுக்கு இன்னும் குறையவில்லை. அதனால், தற்போதைய உலக சந்தை நிலவரத்தைப் பார்க்கும்போது, இலங்கையில் உள்ள எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் செய்யக்கூடிய சூழல் இருப்பதாகத் தெரியவில்லை.”

இவ்வாறு அவர் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.

2026 மே 30 அன்று மேற்கொள்ளப்பட்ட கடைசி விலை திருத்தத்தின் அடிப்படையில், தற்போது அமலில் உள்ள எரிபொருள் விலைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நெல் விலை குறைவு என போராட்டம் நடத்தும் சிலர் கள்ளச்சாராய வியாபாரிகள்!

–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி...