நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு

0
21

– பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் ஆவர். அவர்கள் நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 21 கைதிகளையும் சேர்த்து, இந்தச் சம்பவத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here