நீதிமன்றம் செல்லாத விமல் – காரணம் வெளியானது

0
22

2016ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்காக முன்னிலையான சட்டத்தரணி, விமல் வீரவன்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, வழக்கை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

2016 பிப்ரவரி 6ஆம் திகதி அப்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பாகவும் தும்முல்ல உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டி குருந்துவத்தை பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரோஜர் செனெவிரத்ன மற்றும் மொஹமட் முசம்மில் ஆகியோரும் இணை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here