அதிக பண வீக்கம் கொண்ட உலக நாடுகள் வரிசையில் இலங்கைக்கு மூன்றாம் இடம்! முதலிடம் பெறவும் வாய்ப்பு

Date:

உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் முறையாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது வெனிசுலாவை தாண்டி மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 17.50 வீதத்தில் இருந்த இலங்கையின் பணவீக்கம் மிக உச்சத்தை இந்த மாதம் பதிவு செய்துள்ளது. அதற்கமைய கடந்த 21ஆம் திகதி வெளியான பட்டியலில் இந்த வாரத்திற்கான இலங்கையின் பணவீக்கம் 119 சதவீதத்தை எட்டியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஸ்டீவ் ஹான்கே இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த வார பணவீக்க அட்டவணையில், இலங்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதியன்று, நான் இலங்கையின் பணவீக்கமான 119 சதவீத்தை வான் அளவு உயர்வாக கூறினேன்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் ரூபாயை சேமிக்க, இலங்கை 1884 முதல் 1950 வரை இருந்ததைப் போன்ற ஒரு நாணய சபையை நிறுவ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...