முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வர்த்தகர் டட்லி சிறிசேனவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாவை இடமாற்றத்திற்காக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மகாவலி அமைச்சின் 500 மில்லியன் ரூபாவை வழங்காமல் அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பொலன்னறுவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரது நண்பர்களிடம் வினவியபோது சமல் ராஜபக்ச அமைச்சுப் பதவியை வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளனர்.
மகாவலி இராஜாங்க அமைச்சு தமக்கு வழங்கப்படுமாயின் அது மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கையைப் பாதகமாகப் பாதிக்கும் எனவும் எனவே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடாது எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி மகாவலி அமைச்சு ஜானக வக்கும்புரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சமல் ராஜபக்சவின் உறவினர். இதற்கு முன்னர் சமல் ராஜபக்ஷ மகாவலி அமைச்சை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு வேண்டும் என்று கூறி பெற்றுக்கொண்டார்.