எதிர்கட்சி உறுப்பினர்களின் குடைச்சலை தாங்க முடியாமல் பாராளுமன்றை ஒத்திவைத்தார் சபாநாயகர்

Date:

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பின் மத்தியில் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (09) காலை 10 மணிக்கு இடம்பெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்து, அடுத்த வாரத்திற்குள் அல்லது எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

பத்தரமுல்லை – தியத்த உயன பாராளுமன்ற நுழைவு வீதிப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், பொலிஸாரிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

இது தொடர்பில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...