ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறையில் இருந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அக்டோபர் 9 அன்று ஒரு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
வரவிருக்கும் 2027ஆம் ஆண்டுப் பெருவுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி மற்றும் பிற வரிகளை நீக்குமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தனது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அவர் ஞாபகப்படுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு இந்த வரிவிலக்குகள் பெரும் உதவியாக அமையும் என்றும், குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை இது மேம்படுத்தும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
