பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் தொடர்பான 4 சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில், வழங்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, வாக்குமூலம் வழங்க வந்த அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரங்க நடவடிக்கை அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் பொஸ்பேற் நிறுவனத்திடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
