ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

0
35

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவப் பரிந்துரைக்கு அமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிரிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணையின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here