வங்காள விரிகுடாவில் உருவாகும் ‘அர்னாப்’ புயல் – இலங்கைக்கு கனமழை எச்சரிக்கை..!

0
31

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட அகலாங்கு 15.3° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 89.7° பகுதியில் மையம் கொண்டுள்ளது.

இந்த தொகுதி மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, இன்றைய தினத்துக்குள் (26) சூறாவளியாக உருவெடுக்கக் கூடும். தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27) தீவிர சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பு இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்றபோதிலும், இதன் காற்று சுழற்சி தீவு முழுவதும் பரவுவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here