நம்பிக்கையில்லாப் பிரேரணையை திருத்த முடியாது

0
23

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சபாநாயகரே தலைமை தாங்கும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுத்தமை, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கு உள்ள உரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் என ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டத்திற்கு அடிபணிந்து, அரசாங்கத்திற்குத் தேவையான வகையில் குற்றச்சாட்டுகளைத் திருத்தவோ அல்லது அவற்றை நீக்கவோ எதிர்க்கட்சி தயாராக இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here